செய்திகள்
ஆடிட்டர் குருமூர்த்தி வீடு முற்றுகை - சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது
மயிலாப்பூர் தியாகராயபுரத்தில் உள்ள ஆடிட்டர் குரு மூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்ட மாணவி நந்தினியையும் அவரது தந்தையையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி தமிழகத்தில் பூரண மது விலக்கை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தியுள்ளார்.
தமிழகத்தை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்காகவும் அவர் குரல் எழுப்பி உள்ளார். ஜல்லிக்கட்டுக்காகவும் போராட்டம் நடத்தினார். இந்நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி, தமிழக அரசை திரைமறைவில் இருந்து இயக்குவதாகவும், இதனால் அசாதாரண சூழல் நிலவுவதாகவும் கூறி இருந்தார்.
இதனை கண்டித்து குருமூர்த்தியின் வீட்டை முற்றுகையிடப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தார். இதன்படி இன்று காலை மயிலாப்பூர் தியாகராயபுரத்தில் உள்ள குரு மூர்த்தியின் வீட்டை முற்றுகையிடுவதற்காக மாணவி நந்தினி தனது தந்தையுடன் சென்றார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று நந்தினியையும் அவரது தந்தையையும் கைது செய்தனர். இருவரையும் அழைத்துச் சென்று போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாலையில் மாணவி நந்தினி விடுதலை செய்யப்பட உள்ளார்.