தமிழ்நாடு

இந்த ஜென்மத்துல ஜெயிக்கவே மாட்டீங்க - சீமானுக்கு சாபம் விட்ட விஜயலட்சுமி

Published On 2025-02-04 08:46 IST   |   Update On 2025-02-04 08:46:00 IST
  • பெரியார் யார்? அவர் தமிழ்நாட்டுக்கு என்ன எல்லாம் செய்தார் என்று பெரியாரிஸ்டுகள் வந்து உங்களுக்கு சொல்லுங்க...
  • என்னோட சாபம் உங்கள ஜெயிக்கவே விடாது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும் கருத்துகளுக்கு நடிகை விஜயலட்சுமி அவ்வப்போது வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீமான்- ரஜினிகாந்த் சந்திப்பு நடைபெற்றது.

இதற்கு, விஜய் வீட்டில் பிச்சை எடுத்து பார்த்தாச்சி. அது எதுவும் வேலைக்கு ஆகாது என்றதும் அடுத்ததா போயஸ்கார்டனில் ரஜினி சார் வீட்டில் போய் பிச்சை எடுக்கலாம்-னு போய்ட்டிங்களா Mr. சீமான். விஜய் அண்ணா கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்கு வேற எந்த வழியும் கிடைக்கலையா. ரஜினி சார் யாருனு ஞாபம் இருக்கா என்று கேட்டு விஜயலட்சுமி வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், பெரியார் குறித்து சீமான் பேசிய பேச்சு குறித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெரியார் யார் என்றே உங்களுக்கு தெரியாதா... சரி, பெரியார் யார்? அவர் தமிழ்நாட்டுக்கு என்ன எல்லாம் செய்தார் என்று பெரியாரிஸ்டுகள் வந்து உங்களுக்கு சொல்லுங்க... திராவிட மாடல் என்பது திருட்டு மாடலா? கண்டிப்பா ஒரு நாள் நான் ஜெயிப்பேன்.. அப்போ உங்கள எல்லாம் உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்-னு சொன்னீங்க... அப்படியா கிடையவே.. கிடையாது... இந்த ஜென்மத்துல நீங்க ஜெயிக்கவே மாட்டிங்க. என்னோட சாபம் உங்கள ஜெயிக்கவே விடாது. தொண்ட வற்ற வற்ற கத்தினால் ஜெயிச்சிடுவோம்னு நினைச்சிக்கிட்டீங்களா.. ஒன்னும் கிடையாது என்று பேசியுள்ளார்.

Tags:    

Similar News