செய்திகள்
பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்கள் வெளியீடு
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண்களை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. #TNEA2018 #TNEARandomNumbers
சென்னை:
இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் இன்று வெளியிடப்பட்டன. அண்ணா பல்லைகக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில், விண்ணப்பதாரர்களுக்கான ரேண்டம் எண்களை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் முதன்மை செயலர் சுனில்பாலிவால், பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஆகியோரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பழகன், பொறியியல் படிப்புகளுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் 8ம் தேதி முதல் முதல் 14ம் தேதி வரை வரைசான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்றார். இந்த ஆண்டு டிடி மூலம் 270 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார். #TNEA2018 #TNEARandomNumbers
தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே மாதம் 3ம் தேதி தொடங்கி நடைபெற்றது. மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.