செய்திகள்

ஆஸ்பத்திரியில் போராட்டம்- தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 100 பேர் கைது

Published On 2018-06-05 13:56 IST   |   Update On 2018-06-05 13:56:00 IST
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி உடல் வைக்கப்பட்டுள்ள அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா உடல் வைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் மற்றும் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட செஞ்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மஸ்தான் மற்றும் திமு.க. நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், இளைஞரணி அமைப்பாளர் அண்ணாதுரை மற்றும் விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் அம்பேத் வளவன் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பரபரப்பு நிலவுகிறது. #tamilnews
Tags:    

Similar News