செய்திகள்

சென்னை ஐஐடி-யின் ராக்கெட் ஆய்வகத்தில் தீ விபத்து

Published On 2018-06-05 14:44 IST   |   Update On 2018-06-05 14:44:00 IST
சென்னை ஐஐடியில் உள்ள ராக்கெட் மற்றும் ஏவுகணை ஆய்வகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் பொருட்கள் சேதமடைந்தன. #FireInIITMadras
சென்னை:

சென்னை அடையாறில் உள்ள ஐஐடி வளாகத்தில் ராக்கெட் மற்றும் ஏவுகணை ஆய்வகம் உள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் இன்று காலை 7.45 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. அப்போது, அப்பகுதியில் கட்டுமானப் பணி மேற்கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் செக்யூரிட்டி இதனைப் பார்த்து உடனடியாக ஐஐடி செக்யூரிட்டிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து செக்யூரிட்டிகள் மற்றும் மாணவர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். அதேசமயம் தீயணைப்பு துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. கிண்டி மற்றும் கோட்டூர்புரத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து ஆய்வகம் மூடப்பட்டது. எந்த ஆய்வும் இன்று அனுமதிக்கப்படவில்லை.

கிண்டியில் உள்ள ராஜ் பவன் வளாகத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் இந்த ஆய்வகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #FireInIITMadras

Tags:    

Similar News