செய்திகள்

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு

Published On 2018-06-05 16:05 IST   |   Update On 2018-06-05 16:05:00 IST
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைவு காரணமாக ஒரு பெட்டி தக்காளி ரூ.180-க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், தங்கச்சியம்மாபட்டி, வீரலப்பட்டி, சிந்தலவாடம்பட்டி, பெரியகோட்டை, தா.புதுக்கோட்டை, காப்பிளியபட்டி மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, 16புதூர், கொத்தையம், தேவத்தூர், கள்ளிமந்தையம் உள்பட 38 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தக்காளி நடவு செய்து, அறுவடை செய்து வருகின்றனர்.

தற்போது தக்காளி வரத்து குறைவடைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஒரு பெட்டி தக்காளி ரூ.120 முதல் ரூ.130 வரை ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் கொள்முதல் செய்யப்பட்டது.

தற்போது தக்காளி வரத்து குறைவு காரணமாக ஒரு பெட்டி தக்காளி ரூ.180-க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிலிருந்து கேரளா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தினமும் லாரிகள் மூலம் ஆயிரக்கணக்கான டன் தக்காளி அனுப்பப்படுகிறது.

Tags:    

Similar News