செய்திகள்

பரங்கிமலையில் போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

Published On 2018-06-09 14:21 IST   |   Update On 2018-06-09 14:21:00 IST
பரங்கிமலையில் போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைதானார்கள். மேலும் தலைமறைவான ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆலந்தூர்:

பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் உளவுத்துறை போலீஸ்காரராக பணிபுரிபவர் ராஜசேகர். அவர் நேற்று இரவு 10 மணியளவில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

மடுவாங்கரை மேம்பாலத்தின் சர்வீஸ் ரோட்டில் சென்ற போது 3 பேர் சேர்ந்து வடமாநில வாலிபர்கள் 2 பேரை அடித்து உதைத்து கொண்டிருந்தனர். அதை பார்த்த ராஜசேகர் தனதுமோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தாக்குதலில் இருந்து அவர்களை காப்பாற்றினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள், அவர்களை காப்பாற்ற நீங்கள் யார்? என கேட்டனர். அதற்கு அவர் தான் போலீஸ்காரர் என்றார்.

உடனே அவரை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ அருகே இழுத்து சென்று 3 பேரும் தாக்கினர். மேலும் அவரிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். மர்ம நபர்கள் தாக்கியதில் காயம் அடைந்தார். அவர் குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆலந்தூர் சவுரி தெருவை சேர்ந்த வெங்கடேசன் (30), சந்திரன் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர். நவீன் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News