செய்திகள்
திருத்தணி அருகே 2 இடங்களில் குடிநீர் கேட்டு குடத்துடன் பெண்கள் மறியல்
திருத்தணி அருகே 2 இடங்களில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்தணி:
திருத்தணியை அடுத்த வேலஞ்சேரி கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்காததால் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதுகுறித்து திருத்தணி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு திருத்தணி- நாகலாபுரம் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
திருத்தணி போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இதேபோல திருத்தணி அடுத்த தாழவேடு காலனியில் மாரியம்மன் கோவில் தெரு, கண்ணபிரான் தெரு, அம்பேத்கார் தெருக்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் திருத்தணி நாகலாபுரம் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.
திருத்தணி போலீசார் மற்றும் திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். ஒரே சாலையில் அடுத்தடுத்து 2 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.