செய்திகள்
பம்மலில் கோவிலில் சாமி சிலைகளை சேதப்படுத்தியவர் கைது
பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள கோவிலில் சாமி சிலைகளை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:
பல்லாவரம் அடுத்த பம்மல் இரட்டை பிள்ளையார் கோயில் தெருவில் பிள்ளையார் கோவில் உள்ளது.
நேற்று மாலை கோவிலுக்குள் குடிபோதையில் புகுந்த வாலிபர் அங்கு வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை, அம்மன் சிலை, நாககன்னி சிலை ஆகியவற்றை கல்லால் அடித்து உடைத்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சங்கர் நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் குடிபோதையில் இருந்த அந்த வாலிபரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் அனகாபுத்தூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி விஜயகுமார் என்பது தெரிந்தது. அவருடைய மனைவி கடந்த 6 மாதத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனால் தொடர்ந்து குடிபோதையில் சுற்றி திரிந்துள்ளார் என்று தெரியவந்தது.