செய்திகள்
அவினாசியில் பனியன் நிறுவன மேலாளர் குத்திக்கொலை
அவினாசியில் நடுரோட்டில் பனியன் நிறுவன மேலாளர் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசி:
நாமக்கல்லை சேர்ந்தவர் அம்மாசி. இவரது மகன் கணபதி (வயது 30). இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இவர் அவினாசி தெக்கலூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். கந்தம்பாளையம் பிரிவு 4 ரோடு அருகே வந்தபோது அவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். 4 இடங்களில் கத்தியால் குத்திய பின்னர் 5-வது இடத்தில் கத்தி உடலுக்குள் சிக்கியது. கத்தியை எடுக்க முடியாததால் கொலையாளிகள் தப்பி ஓடிவிட்டனர். படுகாயத்துடன் ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு வந்து கணபதியை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கணபதியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணபதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு போனில் கொலை மிரட்டல் வந்ததாக தெரிகிறது. மேலும் கத்தியால் குத்தப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது.கொலைக்கு தொழில்போட்டி காரணமா? முன்விரோதமா? அல்லது வேறு காரணமா? என்று விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள். அவினாசி ஆஸ்பத்திரியில் கணபதியின் உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.