செய்திகள்
ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

நீலகிரியில் ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

Published On 2019-09-12 17:52 IST   |   Update On 2019-09-12 17:52:00 IST
நீலகிரியில் ஆற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவரை தேடும் பணி நடந்து வருகிறது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்வயல், மஞ்சமூலா கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 26). இவர் சம்பவத்தன்று இரவு ஓணம் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். இரும்புபாலம் பகுதியிலில் இருந்து ராஜகோபால், மது ஆகிய நண்பர்களுடன் ஒற்றையடி பாதை வழியாக வீட்டுக்கு நடந்து வந்துள்ளார். அப்போது, நடைபாதையை ஒட்டிய ஆற்றின் கரையில் மண் சரிந்ததால், ராஜேஷ், தவறி ஆற்றில் விழுந்து காணாமல் போனார். உடன் சென்ற இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள், போலீசார், அப்பகுதி மக்கள் உதவியுடன் நள்ளிரவு, 1 மணிவரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. மீண்டும், நேற்று, காலை முதல் அவரை தேடும் பணி நடந்து வருகிறது. தேவாலா போலீசார் விசாரிக்கின்றனர்.

இதேபோல, மசினகுடி ஆச்சக்கரை பகுதியில் நேற்று காலை குளிக்க சென்ற, அப்சலாம் (69) ஆற்றில் மூழ்கினார். அப்பகுதி மக்கள், உடனடியாக மீட்டு, கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. மசினகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News