செய்திகள்
ஆரணி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
ஆரணி அருகே ஏரி பள்ளத்தில் தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆரணி:
ஆரணியை அடுத்த இரும்பேடு பழைய காலனியில் வசிப்பவர் பழனி. இவருடைய மகன் கனகராஜ் (வயது 13) அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் மகன் கோகுல் (11) அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முகரம் பண்டிகை விடுமுறை என்பதால் கனகராஜ், கோகுல் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிறிதுநேரம் விளையாடினார்கள்.
பின்னர் அனைவரும் ஆரணி-ஆற்காடு சாலை இரும்பேடு கூட்ரோடு அருகே உள்ள பெரிய ஏரியில் குளிக்க சென்றனர். பெரிய ஏரியில் தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதன்காரணமாக ஏரியின் பல இடங்களில் மண் அள்ளப்பட்டு ஆங்காங்கே பள்ளமாக காட்சியளித்தன. இந்த பள்ளமான இடங்களில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி கிடந்தது.
சிறுவர்கள் அனைவரும் ஏரியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி கிடந்த தண்ணீரில் இறங்கி சந்தோஷமாக குளித்தனர். கனகராஜ், கோகுல் ஆகியோர் பள்ளத்தின் ஆழமான பகுதியில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் திடீரென தண்ணீரில் மூழ்கினர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக சிறுவர்கள் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் ஆழம் அதிகமான பகுதி என்பதாலும், நீச்சல் தெரியாத காரணத்தினாலும் அவர்களால் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து அவர்கள் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த பொதுமக்கள் தண்ணீரில் இறங்கி 2 பேரையும் தேடினர். சிறிதுநேரத்தில் உயிரிழந்த நிலையில் 2 பேரும் மீட்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த 2 மாணவர்களின் பெற்றோர்களும் அவர்களின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 மாணவர்களின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஏரியில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் இரும்பேடு காலனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.