செய்திகள்
சூரம்பட்டி பகுதியில் கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது
சூரம்பட்டி பகுதியில் கத்தியை காட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி வலசு நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 39). இவர் நேற்று இரவு சூரம்பட்டிவலசு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் அவரிடம் கத்தியை காட்டி பணம் தருமாறு மிரட்டல் விடுத்தார். இல்லையென்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். பின்னர் அந்த வாலிபர் ராஜாவை தாக்கி ரூ.600 பறித்தார் .
இதுகுறித்து ராஜா சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் என்கிற பூரா சரவணனை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோபி சிறையில் அடைக்கப்பட்டார்.