செய்திகள்
துடியலூர் அருகே பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: கட்டிடத்தொழிலாளி கைது
கோவை மாவட்டம் துடியலூர் அருகே பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிடத் தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை கணுவாய் பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் துரைசாமி (வயது 19). கட்டிட தொழிலாளி. இவர் அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.
இதனை நம்பிய மாணவி துரைசாமியுடன் நெருங்கி பழகினார். இதனை பயன்படுத்திய துரைசாமி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன்பின்னர் துரைசாமி மாணவியை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து துரைசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.