செய்திகள்
மொபட்டை மாட்டு வண்டியில் ஏற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

மொபட்டை மாட்டு வண்டியில் ஏற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-07-09 18:19 IST   |   Update On 2020-07-09 18:19:00 IST
பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் மொபட்டை மாட்டு வண்டியில் ஏற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்க்காரப்பட்டி:

பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் சவுக்கத் அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள்செல்வன், ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியகுழு உறுப்பினர்கள் ஆறுமுகம், ஈஸ்வரன், கிளை செயலாளர்கள் பீர்முகமது, ஆறுமுகம், பிச்சைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மொபட்டை மாட்டு வண்டியில் ஏற்றி வைத்திருந்தனர்.

Similar News