செய்திகள்
திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான உபகரண பொருட்கள் - எம்.எல்.ஏ. வழங்கினார்
திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான உபகரண பொருட்கள் பூண்டி கலைவாணன் எம் எல் ஏ வழங்கினார்.
விளமல்:
திருவாரூர் மாவட்டத்தில் நாள் தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான 200 பெட்ஷீட், 200 வாளி, 5 ஆயிரம் முக கவசம் உள்ளிட்ட உபகரண பொருட்களை தி.மு.க. மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பூண்டி கலைவாணன், மருத்துவமனை முதல்வர் டாக்டர் முத்துகுமரனிடம் வழங்கினார்.