செய்திகள்
நாம் தமிழர் கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் கழிவுநீர் கால்வாய்களின் உடைப்பை சரிசெய்து சீரமைக்க வேண்டும். பெண்களுக்கான கழிப்பறைகளை சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கு திண்டுக்கல் தொகுதி செயலாளர் ஜெயசுந்தர் முன்னிலை வகித்தார்.
இதில் மத்திய மாவட்ட செயலாளர் சைமன், தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் கோரிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.