செய்திகள்
மு.க.ஸ்டாலின்

நான் என்ன கூறுகிறேனோ, அதையே முதலமைச்சர் செய்து வருகிறார் - மு.க.ஸ்டாலின் பேச்சு

Published On 2021-02-05 23:16 IST   |   Update On 2021-02-05 23:16:00 IST
நான் என்ன கூறுகிறேனோ, அதையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தூத்துக்குடி:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் மும்முரமாக மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:-

நீதிமன்றம் கூறியபோது, கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. திமுக கூறிய பின்பு, தற்போது பயிர் கடன்களை தள்ளுபடி செய்துள்ளார் முதல்வர் பழனிசாமி.

திமுக என்ன சொன்னதோ "நான் என்ன கூறுகிறேனோ, அதையே அப்படியே முதலமைச்சர் பழனிசாமி செய்து வருகிறார்". 7 பேர் விடுதலை விவகாரத்திலும், ஆளுநரை நாங்க சந்தித்த பின் தான், அவர் சந்தித்தார். பொய் நாடகங்களை நாள்தோறும் நடத்தி வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி. அணையப் போகும் அரசாக அதிமுக அரசு உள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News