செய்திகள்
கொரோனா விதிமுறைகளை மீறியதாக 2 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
பூதலூரில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ஒரு மாவரைக்கும் கடை உரிமையாளருக்கு ரூ.500-ம், மற்றொரு தனியார் சிமெண்டு் விற்பனை கடை உரிமையாளருக்கு ரூ 5ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.
திருக்காட்டுப்பள்ளி:
பூதலூர் வட்டாரத்தில் நேற்று 19 பேருக்கு கொரோனாஉறுதியாகியுள்ளது. இதில் 16 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 3 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று சுகாதாரப் பணியாளர்களால் கோட்டரப்பட்டி, சின்னகாங்கேயன்பட்டி, அகரப்பேட்டை ஆகிய ஊர்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 30 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. பூதலூரில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ஒரு மாவரைக்கும் கடை உரிமையாளருக்கு ரூ.500-ம், மற்றொரு தனியார் சிமெண்டு் விற்பனை கடை உரிமையாளருக்கு ரூ 5ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.