செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்றிய ஆட்டோ டிரைவருக்கு உதவி

Published On 2021-06-29 12:33 IST   |   Update On 2021-06-29 12:33:00 IST
ரூ. 48 ஆயிரம் கடன் தொகையை ஆட்டோ பைனான்சியரிடம் வழங்கி அடமானத்தில் இருந்த ஆட்டோவின் உரிம புத்தகத்தை பெற்று சிராஜிடம் ஒப்படைத்தனர்.
அவிநாசி:

கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்த நேரத்தில் அவிநாசியில் உள்ள தன்னார்வலர்கள் இணைந்து அவிநாசி அரசு கலைக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் அமைத்திருந்தனர்.

இந்தநிலையில் அவிநாசியை சேர்ந்த சிராஜ் என்ற ஆட்டோ டிரைவர் தனது ஆட்டோவில் கொரோனா நோயாளிகளை இலவசமாக சிகிச்சை மையம் மற்றும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர்கள் குணமான பின் மீண்டும் வீடு கொண்டு வந்து சேர்க்கும் சேவையை செய்து வந்தார்.

அவிநாசி கிழக்கு மற்றும் திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கத்தினர் அவரது ஆட்டோவுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்து கொடுத்தனர். மேலும் அவர் தனது ஆட்டோ உரிம புத்தகத்தை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்ததை அறிந்த ரோட்டரி நிர்வாகத்தினர் அவர் செலுத்த வேண்டிய ரூ. 48 ஆயிரம் கடன் தொகையை ஆட்டோ பைனான்சியரிடம் வழங்கி அடமானத்தில் இருந்த ஆட்டோவின் உரிம புத்தகத்தை பெற்று சிராஜிடம் ஒப்படைத்தனர். இதற்காக ரோட்டரி சங்கத்தினருக்கு சிராஜ் நன்றி தெரிவித்தார்.

Similar News