செய்திகள்
கொரோனா வைரஸ்

வேலூர் மாவட்டத்தில் இன்று 36 பேருக்கு கொரோனா

Published On 2021-06-29 16:00 IST   |   Update On 2021-06-29 16:00:00 IST
கொரோனாவை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 46,826 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45,317 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 474 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1035 பேர் பலியாகியுள்ளனர். 2-வது அலையில் மட்டும் 600-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இன்று 36 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த வாரம் 250-க்கு கீழ் இருந்தது. தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

ஊரடங்கு தளர்வு நேரத்தில் பொதுமக்கள் அதிகளவில் வெளியே வரவேண்டாம். இதனால் மீண்டும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது.

அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News