செய்திகள்
திண்டுக்கல் அருகே கொரோனாவுக்கு முதியவர் பலி
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த வேடசந்தூரை சேர்ந்த 74 வயது முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த வேடசந்தூரை சேர்ந்த 74 வயது முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்தது. இதற்கிடையே நேற்று 3 பெண்கள் உள்பட மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்து 283 ஆக அதிகரித்தது. அதேநேரம் 12 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 162 பேர் சிகிச்சையில் உள்ளனர்.