செய்திகள்
கோப்புபடம்

பாளை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் பலி

Published On 2021-09-22 14:42 IST   |   Update On 2021-09-22 14:42:00 IST
பாளை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் திடீரேன உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை அருகே முன்னீர்பள்ளம் பகுதியில் கடந்த வாரம் பழிக்குப் பழியாக 2 பேர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவியது. இதையடுத்து மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் முன்னீர்பள்ளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் வெளி மாவட்ட போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இதில் ராஜபாளையம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் கபிலன் (வயது 38) என்பவரும் ஒருவராவார்.

கபிலன் கோபால சமுத்திரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று அவரது திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கோபாலசமுத்திரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் பிரசாத் என்பவருக்கு நேற்று திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News