உள்ளூர் செய்திகள்
தேர் திருவிழாவை முன்னிட்டு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் நேற்று இரவு கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி

கபிலர்மலை தேரோட்ட நிகழ்ச்சியில் குவிந்த பக்தர்கள்

Published On 2022-01-20 13:51 IST   |   Update On 2022-01-20 13:51:00 IST
கபிலர்மலை பாலசுப்பிரமணியசாமி கோவில் தேரோட்டத்தின் 2ம் நாளில் பக்தர்கள் குவிந்தனர்.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா கபிலர்மலையில் உள்ள பாலசுப்ரமணியசுவாமி கோவில் தேரோட்டம் தைப்பூசத்தன்று நடைபெற்றது.  தேரோட்டத்தின் 2ம் நாள் காலை பால் காவடி, மயில் காவடி, பன்னீர் காவடி போன்றவைகளை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கொண்டு சென்று மலை ஏறி மலை மேல் உள்ள பாலசுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன் சென்று பாலசுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது .காலையிலிருந்து மதியம் வரை மிக குறைவாக இருந்த கூட்டம் மாலை நேரத்தில் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர்.

தேர் திருவிழாவை முன்னிட்டு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் நேற்று இரவு கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில் மலையை சுற்றியும் ஏராளமான பல்வேறுவிதமான கடைகள் போடப்பட்டிருந்தன. இரவு நேரத்தில் ஏராளமானோர் குவிந்து களைகட்டியது. பக்தர்களின் கூட்டம் விடிய விடிய இருந்தது.

Similar News