உள்ளூர் செய்திகள்
வாணியம்பாடி மதுவிலக்கு அமுல் பிரிவு போலீஸ் நிலைய கட்டிடம்.

இடிந்து விழும் நிலையில் உள்ள போலீஸ் நிலையம்

Published On 2022-01-20 14:56 IST   |   Update On 2022-01-20 14:56:00 IST
வாணியம்பாடியில் இடிந்து விழும் நிலையில் உள்ள போலீஸ் நிலையத்தை இடிக்ககோரி கட்டிடஉரிமையாளர் மனு அளித்துள்ளார்.
வாணியம்பாடி:

வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் கட்டிடம் இயங்கி வருகிறது.

இந்த வாடகை கட்டிடத்தின் உரிமையாளர் நுஸ்ரத்துன்னிஸ்£ என்பவர் வாணியம்பாடி நகராட்சி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய கடித்த்தில், தன்னுடைய கட்டிடம் 85 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த கட்டிடமாக உள்ளது. 

இந்த கட்டிடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு மதுவிலக்கு அமல் பிரிவு கட்டிடமாக இயங்கி வர வாடகைக்கு விட்டிருந்தோம். தற்போது தொடர் மழையின் போது கட்டிடத்தின் பெரும் பகுதி மிகவும் பழுதடைந்து உள்ளதாகவும், இதனால் அக்கம், பக்கத்தில் குடியிருப்பவர்களும், பின்புறத்தில் உள்ள பள்ளிவாசல் அருகில் உள்ளவர்களும் கட்டிடம் ஆபத்தாக உள்ளதாகவும், தொடர்ந்து அச்சமடைந்து புகார் அளித்து வருகின்றனர். 

இதனால் எனக்கு சொந்தமாக உள்ள இந்த கட்டிடத்தை உடனே காலி செய்து தரக்கோரி பலமுறை மனு அளித்துள்ளேன். இந்த நிலையில் ஆபத்தான நிலையில் உள்ள பழைய கட்டிடங்கள் அனைத்தும் இடிக்க தமிழக அரசு உத் திரவிட்டிருந்தது, ஆனால் இந்த இடத்தை காலி செய்ய கோரி மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில்  வாணியம்பாடி நகராட்சி நான் அளித்து இருந்த புகார் மனுவின் படி, அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான உரிய கட்டணத்தைச் செலுத்தி அதன் பேரில்,  வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் ஸ்டாலின்பாபு உத்தரவின் பேரில், எனக்கு சொந்தமான பழமையான கட்டிடத்தை முழுமையாக இடிந்து தரைமட்டமாக அளிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தேன். 

அதன் பேரில் அவர் அளித்த உத்தரவில், நகராட்சி அளித்துள்ள அனைத்து நிபந்தனையின் அடிப்படையில், நான் இந்த கட்டிடத்தை இடிக்க உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளித்து காலி செய்ய வேண்டும் என மீண்டும் அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் மனு அளித்துள்ளார்.

உயிர் சேதம் ஏற்படும் முன் கட்டிடத்தை காலி செய்து தர மாவட்ட போலீஸ் நிர்வாகம் முன்வர வேண்டும் என கட்டிட உரிமையாளர் வலியுறுத்திள்ளார்.

Similar News