உள்ளூர் செய்திகள்
முகாமில் சிறந்த கன்றுக்குட்டிகள் மற்றும் மாடுகளை வளர்த்த விவசாயிகள் கவுரவிக்கப்பட்டனர்.

பரமத்தி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

Published On 2022-01-20 16:09 IST   |   Update On 2022-01-20 16:09:00 IST
பரமத்தி அருகே தமிழக அரசின் சிறப்பு திட்டமான கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஒன்றியம் சுண்டபனை கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை பணிகள், சினை பரிசோதனை, குடற்புழு நீக்க மருந்துகளை கன்றுகள் மற்றும் ஆட்டினங்களுக்கு அளித்தல், செயற்கை முறை கருவூட்டல், சினை பிடிக்காத கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டன. சிறந்தமுறையில் கன்றுகள் பராமரிப்போருக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் சிறந்த முறையில் கால்நடை வளர்ப்பு முறைகளை கையாளும் முன்னோடி கால்நடை வளர்க்கும் சிறந்த கால்நடை விவசாயிகளுக்கு சிறப்பு மேலாண்மை விருதுகள் கால்நடை துறையினரால் வழங்கபட்டன.

முகாமில் 450 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் இதர சிகிச்சைகள் அளித்தனர்.
முகாம் ஏற்பாடுகளை கால்நடை உதவி மருத்துவர் டாக்டர்சதீஸ்குமார் செய்துருந்தார்.

Similar News