உள்ளூர் செய்திகள்
கல்லூரியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் நடந்தது.

தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

Published On 2022-03-08 13:06 IST   |   Update On 2022-03-08 13:06:00 IST
தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் நடந்தது.
கன்னியாகுமரி:

தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதுகுறித்து நடைபெற்ற விழாவில் பெண்மையின் மேன்மை குறித்து பேசப்பட்டது. 

அதன்பின் மாணவியர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டிக்கிறோம் என்றும் பெண்மையை மதிப்போம் போன்ற பதாகைகளை ஏந்தி வரிசையில் நின்று பெண்மைக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளுக்கு தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தனர். 

இந்நிகழ்ச்சிகளுக்கு முனைவர் கிளாடிஸ் லில்லி தலைமை வகித்தார், துணை முதல்வர் முனைவர் பிருந்தா, பேராசிரியர்கள் ஜோஸ்லின், ஜினிஷா, ஹெலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Similar News