உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

இட பிரச்சனை தகராறில் ஒருவர் கைது

Published On 2022-03-08 13:42 IST   |   Update On 2022-03-08 13:42:00 IST
இட பிரச்சனை தகராறில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
திருச்சி :

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த ஏவூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து மகன் சுந்தர்ராஜன் (வயது 53)இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மகன் பிரகாசம் என்பவருக்கும் இடப் பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று பிரகாசம்  மற்றும் அவருடைய மகன்கள் பிரசாந்த், பிரபாகரன் ஆகிய மூவரும் சேர்ந்து சுந்தரராஜனை தாக்கியதாக தெரிகிறது. இதில்  சுந்தர்ராஜனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து முசிறி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்தையன்  வழக்கு பதிவு செய்து பிரகாசத்தை கைது செய்து விசாரித்து வருகிறார்.     
    

Similar News