உள்ளூர் செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
கன்னியாகுமரி:
தக்கலை கேரளபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 55), கூலி தொழிலாளி. குளச்சல் சாத்தான் கரையைச் சேர்ந்தவர் ராஜசேகர் (34) எல்லை பாதுகாப்பு படை வீரர். இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திங்கள்சந்தையிலிருந்து மணவாளக்குறிச்சி சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.
மோட்டார் சைக்கிளை ராஜசேகர் ஓட்டினார். ரமேஷ் பின்னால் அமர்ந்திருந்தார்.
குன்னங்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தனர். படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ரமேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.