உள்ளூர் செய்திகள்
கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

ஆழ்வார்திருநகரி யூனியன் கூட்டத்தில் 71 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Published On 2022-03-08 15:20 IST   |   Update On 2022-03-08 15:20:00 IST
ஆழ்வார்திருநகரி யூனியன் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் ஜனகர் தலைமையில் நடைபெற்றது. இதில் 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ராஜாத்தி, ஒன்றிய குழு அ.தி.மு.க. உறுப்பினர் தானி ராஜ்குமார் உட்பட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் வரையறுக்கப்பட்ட வேலைகளுக்கு ரூ.25,10,985  வரையறுக்கப்படாத வேலைகளுக்கு ரூ.33,47,980 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டத்தில் கவுன்சிலர் தானி ராஜ்குமார், ராஜபதி, முதல் மணத்தி வரை இணைப்பு சாலையும், பிள்ளையார் கோவிலிருந்து ராஜபதி வரை தார்சாலையும், மணத்தி வரை தெருக்களில் பேவர் பிளாக் அமைத்து கொடுக்கவும், தொட்டியங்குடியிருப்பில் படித்துறையும் அமைத்து கொடுக்க கேட்டு கொண்டார். 

நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News