உள்ளூர் செய்திகள்
பேரூர் பட்டீசுவரர்

கோவை பேரூர் பட்டீசுவரர் கோவில் பங்குனி உத்திர திருவிழா நாளை தொடக்கம்

Published On 2022-03-08 15:38 IST   |   Update On 2022-03-08 15:38:00 IST
பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
பேரூர்:

பேரூர் பட்டீசுவரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

 ஒவ்வொரு ஆண்டும், பேரூர் பட்டீசுவரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா 10 நாள் உற்சவமாக வெகு சிறப்பாக நடப்பது வழக்கம்.  இந்தாண்டு, பங்குனி உத்திர தேர்த்திருவிழா  நாளை (9ந் தேதி) காலை 8 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

தொடர்ந்து, மாலை யாகசாலை பூஜையும், மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.  வருகிற 17&ந் தேதி   வரை 8 நாட்களுக்கு, காலை தோறும் யாகசாலை பூஜைகளும், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும், நடக்கிறது.

வருகிற 14&ந் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு,  15ந் தேதி மாலை பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. 
 
இதையடுத்து, மாலை 4.35 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து 17ந் தேதி இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது.  18ம் தேதி அதிகாலை நடராஜருக்கு மகா அபிஷேகமும், காலை 7 மணிக்கு மேல் பங்குனி உத்திர தரிசன காட்சியும், திருவீதி  உலாவும்   நடக் கிறது. 

இறுதியாக, இரவு 8 மணிக்கு கொடியிறக்குத லுடன் விழா முடிகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். 

Similar News