உள்ளூர் செய்திகள்
மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் என்று தெற்கு மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை எல்லீஸ் நகர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (9-ந்தேதி) மழைக்கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன்காரணமாக அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
எல்லீஸ் நகர் மெயின்ரோடு, தமிழ்நாடு ஹவுசிங்போர்டு குடியிருப்புகள், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் போடிலைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் மருத்துவமனை ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர் 1-வது தெரு முதல் 7-வது தெருக்கள் வரை, டி.பி.ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் 1 மற்றும் 2-வது தெருக்கள், எஸ்.டி.சி.ரோடு. பைபாஸ் ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா, சுப்பிரமணியபுரம் ரவுண்டானா, வசந்த நகர், ஆண்டாள்புரம் அக்ரிணி அபார்ட்மெண்ட், வசுதரா அபார்ட்மெண்ட், பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ். ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, டவுண் ஹால் ரோடு, காக்கா தோப்பு முதல் மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் வரை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.