உள்ளூர் செய்திகள்
நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை- பல் டாக்டர் கைது
நெல்லை கிளினிக்கில் பயிற்சிக்கு வந்த நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பல் டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்தவர் சுகுமார் (வயது48), பல் டாக்டர். இவர் சமாதான புரத்தில் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது மருத்துவமனையில் நெல்லை பகுதியை சேர்ந்த ஒரு நர்சிங் மாணவி பயிற்சிக்காக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அந்த மாணவி மற்றும் அவரது பெற்றோர் பாளை போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அதில் பயிற்சி பெற்று வந்த செவிலியர் மாணவியை மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொல்லை செய்ததாக டாக்டர் சுகுமார் மீது புகார் கூறி இருந்தார்.
இது தொடர்பாக பாளை சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் பாலச்சந்திரன் விசாரணை நடத்தினார்.அதில் மாணவியை டாக்டர் பாலியல் தொல்லை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர் மீது 354 (1), 506 (1) மற்றும் பெண் வன்கொடுமை, தீண்டாமை வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் புகார் தெரிவித்த மாணவியிடமும் பாளை போலீசாரும், அனைத்து மகளிர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.