உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கோட்டார் பகுதியில் சிக்கிய மரநாய்

Published On 2022-04-07 13:59 IST   |   Update On 2022-04-07 13:59:00 IST
கோட்டார் பகுதியில் மரநாய் சிக்கியது
நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தின் அருகே நுகர்வோர் சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் இன்று காலை ஒரு மரநாய் சுற்றி வந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அந்த மரநாயை  லாவகமாக பிடித்தனர். 

பின்னர் இதுகுறித்து நாகர்கோவிலில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரநாயை அங்கிருந்து மீட்டு அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

Similar News