உள்ளூர் செய்திகள்
தட்டான்குட்டை மாரியம்மன் கோவில் திருவிழா
குமாரபாளையம் தட்டான்குட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
குமாரபாளையம்,
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை செல்வ மாரியம்மன் திருவிழா கடந்த 29-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காவிரி ஆற்றிலிருந்து மேளதாளங்கள் முழங்க, மஞ்சள் ஆடை கட்டி பெண்கள் தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர்.
விழாவையொட்டி வண்ண மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மாரியம்மன் அருள்பாலித்தார். இன்று அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. பின்பு பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.