உள்ளூர் செய்திகள்
விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கல்
ஆத்தூர் தோட்டக்கலை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட்டன.
ஆத்தூர்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அப்பம்மசமுத்திரம் மற்றும் கல்லாநத்தம் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் கூட்டுபண்ணை திட்டத்தில் தலா ரூ. 5 லட்சம் மதிப்பிலான பண்ணை எந்திரங்கள் உழவர் உற்பத்தியாளர் நல குழுவினருக்கு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் ஆத்தூர் வட்டார அட்மா குழு தலைவர் டாக்டர். செழியன் பண்ணை கருவிகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
ஆத்தூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஞானபிரியா தலைமை தாங்கினார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பத்மினி பிரியதர்சினி, சேகர், தோட்டக்கலை உதவி அலு-வலர்கள் செல்வேந்திரன், கோபால் மற்றும் வேளாண் குழு உறுப்பினர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.