உள்ளூர் செய்திகள்
டெய்லரிங் படிக்க சென்ற இளம்பெண் மற்றும் முதியவர் மாயமான புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
ஸ்ரீரங்கம் சத்திய மூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகள் ரம்யா (வயது 20). இவர் ஸ்ரீரங்கத்திலிருந்து கருமண்டபத்தில் டெய்லரிங் படிப்பதற்காக சென்றார்.
பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் பிரசன்னா ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில் திருச்சி மேலகல்கண்டார் கோட்டை மூகாம்பிகை தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்கிற 78 வயது முதி-யவர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்ப-வில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.