உள்ளூர் செய்திகள்
அமைச்சர் கே.என்.நேரு

கூவம், அடையாறு நீரின் தரத்தை மேம்படுத்த ஆகஸ்டில் அறிக்கை- கே.என்.நேரு தகவல்

Published On 2022-04-07 15:12 IST   |   Update On 2022-04-07 15:12:00 IST
கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் தரம் மேம்படுத்துவதற்கான விரிவான சாத்தியக்கூறு குறித்த இறுதி அறிக்கை ஆகஸ்ட் 2022-ல் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுவதாக சட்டசபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.
சென்னை:

பெரு நகரில் உள்ள நீர் வழிப்பாதைகளின் நீரின் தரத்தை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மேம்படுத்துவதற்கான முழுமையான அணுகுமுறையை உறுதி செய்வதற்கு முதற்கட்டமாக கூவம் மற்றும் அடையாறு ஆறுகளுக்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்கும் இரண்டாம் கட்டமாக பக்கிங்காம் கால்வாய்க்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு இந்த சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிப்பதற்கான ஆலோசகராக, தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனத்தை நியமித்து உள்ளதாகவும் இதில் இடைவெளி மதிப்பீடு பொருத்தமான தொழில்நுட்பத்தில் நிதி பகுப்பாய்வு போன்றவை அடங்கும் என்றும் இறுதிகட்ட அறிக்கை ஆகஸ்ட் 2022-ல் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News