உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

களக்காட்டில் தோட்ட மேலாளருக்கு கொலை மிரட்டல்-வனத்துறை ஊழியர் மீது வழக்கு

Published On 2022-04-07 15:16 IST   |   Update On 2022-04-07 15:24:00 IST
களக்காடு அருகே உள்ள மலையடிபுதூரில் தோட்ட மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வனத்துறை ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

களக்காடு:

திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிபுதூர் நெல்லிதோப்பு மலையடி வாரத்தில் உள்ள நாங்குநேரி வானமாமலை மடத்திற்கு சொந்தமான 250 ஏக்கர் நிலங்களை வக்கீல் மாதவன் என்பவர் குத்தகைக்கு பெற்று விவசாயம் செய்து வருகின்றார். 

தோட்டத்தை சுற்றிலும் வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க சோலார் மின் வேலியும், முள் வேலியும் அமைத்துள்ளார். மேலும் தோட்டத்தில் ஈட்டி, தேக்கு, செம்மரம், வேங்கை, யூகாலிப்ட்ஸ், மில்லிஜிரா போன்ற மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறார். 

இந்நிலையில் களக்காடு புலிகள் காப்பக வனத்துறையில் திருக்குறுங்குடி பீட் வனக்காப் பாளராக பணி புரிந்து வரும் கருப்பசாமி என்பவர் தோட்டத்திற்குள் புகுந்து சோலார் மின் வேலி, முள் வேலிகளை சேதப்படுத்தியுள்ளார். 

அங்கு நடப் பட்டிருந்த மரக்கன்றுகளை யும் பிடுங்கி எறிந்து நாசம் செய்துள்ளார். இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இதைப்பார்த்த தோட்ட தொழிலாளி ஜெயா தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு வனக்காப்பாளர் கருப்பசாமி அவரை அவதூறாக பேசியுள்ளார். 

இதுகுறித்து தோட்டத்தின் மேலாளர் திருக்குறுங்குடி சன்னதி தெருவை சேர்ந்த அய்யப்பன் (31) கருப்பசாமியிடம் கேட்டதற்கு, அவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். 

இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுதொடர்பாக வனக்காப் பாளர் கருப்பசாமி மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News