உள்ளூர் செய்திகள்
களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூரை சேர்ந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் விவசாயி முருகன் (வயது 56). இவரது மனைவி சண்முகத் தாய். இவர்களுக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் முருக னுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. அடிக்கடி மது அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் விரக்தியுடன் காணப் பட்டார்.
கடந்த 2-ந்தேதி அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரி ழந்தார். இதுபற்றி அவரது மகன் கணபதி (20) களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராம நாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.