உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வரும் 19-ந் தேதி சித்திரை தேரோட்டம்

Published On 2022-04-07 15:37 IST   |   Update On 2022-04-07 15:37:00 IST
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வரும் 19-ந் தேதி சித்திரை தேர் திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ளது.
திருச்சி:


சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாக்களுள் பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம் ஆகியவை மிகவும் சிறப்பு பெற்றதாகும்.

வேறு எந்த தலத்திலும் காணப்பெறாத வகையில், இத்தலத்தில் அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக பதம் மாறி சிவபதத்தில் விக்ரம சிம்மாசனத்தில் எழுந்தருளி மும்மூர்த்திகளை நோக்கி மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது அம்மன் காத்து நிற்கிறார்.

இதற்காக சகல சவுபாக்கியங்களும் கிடைக்க அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம், ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை இருப்பது சிறப்பு.

இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை பெருந்திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை காலையில் பல்லக்கிலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் அம்மன் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இந்த ஆண்டு தேர்த்திருவிழா வருகிற 10-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் 19-ந்தேதி தேரோட்டம் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, அன்று காலை 6 மணிக்குமேல் 8 மணிக்குள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளுகிறார். இரவு அம்மன் கேடயத்தில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் எழுந்தருளி அருள் பாவிக்கிறார்.

இதேபோன்று ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். மேலும் தினமும் இரவு 8 மணிக்கு சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷவாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கோவிலை வலம்வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Similar News