உள்ளூர் செய்திகள்
விபத்துக்கள் நடக்கும் சாலையை படத்தில் காணலாம்

புவனகிரியில் அவலம்- உயிர்ப்பலி வாங்குவதற்கு காத்திருக்கும் சாலை

Published On 2022-04-07 15:49 IST   |   Update On 2022-04-07 15:49:00 IST
புவனகிரி - விருத்தாசலம் செல்லும் சாலையில் விபத்துகளை தடுக்க சாலை மைய பிரிப்பான் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புவனகிரி:

புவனகிரி - விருத்தாசலம் செல்லும் சாலை 35 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதியதாக அமைக்கப்பட்டது. இந்த சாலை பல கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தி போடப்பட்டது.

இந்த மாநில நெடுஞ்சாலை 2 வழி சாலையாக போடப்பட்டுள்ளது. புதியதாக போடப்பட்ட சாலையில் போக்குவரத்து தொடங்கப்பட்டதிலிருந்து விபத்துகள் அதிகமாக நடைபெற்று உயிர் சேதம் விளைவித்து வருகிறது.

இதனை தடுக்க சாலை மைய பிரிப்பான் அமைத்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக மைய பிரிப்பான் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News