உள்ளூர் செய்திகள்
மதுரை-செகந்தராபாத் சிறப்பு ரெயில்
மதுரையில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
மதுரை
வருகிற 13, 20, 27-ந்தேதி புதன்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், அடுத்த நாள் காலை 7.25 மணிக்கு செகந்திராபாத் செல்லும். திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நலகொண்டாவில் இந்த ரெயில் நின்று செல்லும்.
மறுமார்க்கத்தில் செகந்திராபாத்தில் இருந்து வருகிற 11, 18, 25ந்தேதி திங்கட்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அடுத்த நாள் இரவு 8.45 மணிக்கு மதுரை வந்தடையும். இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுபெட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.
-மேற்கண்ட தகவலை மதுரை ரெயில்வேகோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.