உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவையில் பிளஸ்-2 மாணவி தற்கொலை

Published On 2022-04-07 16:34 IST   |   Update On 2022-04-07 16:34:00 IST
வீட்டிக்கு தாமதமாக வந்ததை தாய் தட்டி கேட்டதால் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை: 

கோவை விளாங்குறிச்சி அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் நாகேஸ்வரி (வயது 17).

இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்&2 படித்து வந்தார்.  சம்பவத்தன்று இவர் வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். மாலையில் பள்ளி முடிந்து நீண்ட நேரத்துக்கு பின்னர் காலதாமதமாக வீட்டிற்கு வந்தார். 

இதனையடுத்து நாகேஸ்வரியிடம் அவரது தாய் ஏன்  இவ்வளவு காலதாமதம் என கேட்டார். அதற்கு பதில் ஏதும் அளிக்காமல் வீட்டில் உள்ள அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார். 

அங்கு வைத்து நாகேஸ்வரி சாணிப்பவுடரை கரைத்த குடித்தார். பின்னர் தனது சகோதரிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் சாணிப்பவுடர் குடித்து விட்டதாக தெரிவித்தார். உடனடியாக அவர் விரைந்து சென்று தனது சகோதரியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நாகேஸ்வரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Similar News