உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் ரூ.41.74 கோடியில் புதிய மேம்பாலம் திறப்பு
திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் ரூ.41.74 கோடியில் புதிய மேம்பாலம் திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையின் மையப் பகுதியில் திண்டிவனம் சாலையில் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் இல்லாமல் பொதுமக்கள் படாதபாடு பட்டனர்.இந்த நிலையில் புதிய மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.ரூ.41.74 கோடி செலவில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது .இதனை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இச்சாலை மேம்பாலத்தால் , திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரி , திண்டிவனம் , விழுப்புரம் , திருக்கோவிலூர் .செஞ்சி , சென்னை செல்லும் அனைத்து வாகனங்களும் புதுச்சேரி , திண்டிவனம் , விழுப்புரம் , திருக்கோவிலூர், செஞ்சியிலிருந்து திருவண்ணாமலை , கிருஷ்ணகிரி பெங்களூர் செல்லும் அனைத்து வாகனங்களும் பயன் அடையும்.
மேலும் , நாட்டின் பிற பகுதியிலிருந்து அண்ணாமலையார் கோவிலுக்கு வருடம் முழுவதும் பக்தர்கள் வருவதாலும் , பவுணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதால் இச்சாலை மேம்பாலம் மிகவும் பயனுள்ளதாக அமையும் , மேலும் அலுவலகம் செல்லும் மக்கள் . கல்லூரி மற்றும் பள்ளி மாணவ , மாணவியர் இந்த சாலை மேம்பாலத்தை பயன்படுத்தி பயனடைவார்கள் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.