உள்ளூர் செய்திகள்
கலெக்டர் முருகேஷ் உடற்பயிற்சி செய்த போது எடுத்த படம்.

திருவண்ணாமலையில் போலீசார் பயிற்சி செய்ய நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு

Published On 2022-04-07 16:44 IST   |   Update On 2022-04-07 16:44:00 IST
திருவண்ணாமலையில் போலீசார் பயிற்சி செய்ய நவீன உடற்பயிற்சி கூடத்தை கலெக்டர் முருகேஷ் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் அமைந்துள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் புதிதாக காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

அதனை கலெக்டர் முருகேஷ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அங்குள்ள நவீன உடற்பயிற்சி கருவிகளில் கலெக்டர் முருகேஷ் உடற்பயிற்சி செய்தார்.

அவர் பேசும்போது, போலீசார் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் வலுவுடனும் இருக்க வேண்டியது அவசியம். அதற்கு அவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

அவர்கள் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நவீன கருவிகளுடன் இந்த உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப் பட்டுள்ளது.இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் ரெட்டி மற்றும் கூடுதல் கலெக்டர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, டாக்டர் கம்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News