உள்ளூர் செய்திகள்
கொலையுண்ட சரவணன்.

நிலத்தகராறில் தொழிலாளியை அடித்துக்கொன்ற தாய்-மகன்

Published On 2022-04-07 16:52 IST   |   Update On 2022-04-07 16:52:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நிலத் தகராறில் தொழி லாளியை அடித்து கொன்ற தாய்& மகனை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஆனந்தூர் அடுத்த ஏரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 45), கூலித்தொழிலாளி.

இவர் லதா என்ற பெண் ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். இருவரும் கடந்த 18 ஆண்டுகளாக கணவன்& மனைவி போல் வீட்டில் வசித்து வந்தனர். குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் சரவணனுக்கும்  அதே பகுதியை சேர்ந்த தேவனின் மனைவி ஜீவஜோதி (55), அவரது மகன் ஜெயபிரகாஷ் (35) ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜீவ ஜோதி, ஜெயபிரகாஷ் ஆகி யோர் கொடு அரிவா ளால் சரவணனை தாக்கி வெட் டினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் அலறி துடித்தார். இதை யடுத்து ஜீவஜோதியும், ஜெய பிரகாசும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதற்கிடையே ரத்த வெள் ளத்தில் உயிருக்கு போராடிய சரவணனை, அக்கம் பக்கத் தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின் னர் மேல் சிகிச்சைக்காக  தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சரவணன் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே சரவண னை கொன்ற தாய் ஜீவஜோதி, அவரது மகன் ஜெயபிரகாஷ் ஆகியோரை போலீ சார் கைது செய்தனர்.

நிலத்தகராறில் தொழி லாளியை தாயும், மகனும் சேர்ந்து அடித்தே கொன்ற சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News