உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் வருகிற 28-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2022-10-26 15:22 IST   |   Update On 2022-10-26 15:22:00 IST
  • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
  • விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் வருகிற 28-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

கிருஷ்ணகிரியில் வருகிற 28-ம் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News