உள்ளூர் செய்திகள்

விபத்துக்குள்ளான கார்.

திண்டுக்கல் அருகே கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

Published On 2022-06-19 13:00 IST   |   Update On 2022-06-19 13:00:00 IST
  • திண்டுக்கல்- மதுரை சாலையில் வந்த கார் டயர் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது
  • இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

குள்ளனம்பட்டி :

வேலூர் மாவட்டம் காந்திநகரை சேர்ந்தவர் மோகன் (வயது42). இவர் தனது மனைவி சோனியா (36), மகள் அனுஷியா (12) ஆகியோருடன் காரில் வேலூரில் இருந்து திருநெல்வேலிக்கு சென்றார்.

திண்டுக்கல்- மதுரை சாலையில் போக்குவரத்து நகர் அருகே வந்தபோது திடீரென கார் டயர் வெடித்தது. இதில் தாறுமாறாக ஓடிய கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் மோகன் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு அவர்களை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அம்பாத்துரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News