உள்ளூர் செய்திகள்
- கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பாபநாசம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- பாபநாசம் போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை குடமுருட்டி ஆற்றின் அருகே கஞ்சா விற்பனை நடை பெறுவதாக பாபநாசம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிய 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்தமகேந்திரன் (வயது 25), கதிர்வேல் (22), ஜம்புகேஸ்வரர் (22), விருதாச்சலத்தை சேர்ந்த முஹம்மது சல்மான் (19) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.